2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பிரதேச செயலக கலாசார விழா

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்
, ஜதுஷன்

மண்முனை, தென்னெருவில்பற்று பிரதேச செயலக கலாசாரப் பேரவை நடத்தும் பிரதேச கலாசார விழா களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் கலாசார மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்;பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
இதன்போது களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் கலை, கலாசாரங்கள் அடங்கிய 'எழுவான் சஞ்சிகை' வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இந்நூல் நயவுரையை கவிஞரும் முன்னாள் அதிபருமான கோபாலபிள்ளை நிகழ்த்தினார்.

அத்துடன் பிரதேச கலைஞர்கள் 5 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
 
கௌரவிக்கப்பட்ட கலைஞர்கள் 

01. காளி பரசுராமன் - களுதாவளை
02. சரவணை செல்லையா - பெரியகல்லாறு
03. வயிரமுத்து நல்லரெத்தினம் - மகிழுர்
04. விநாசித்தம்பி கருணையம்மா - குருமண்வெளி
05. சண்முகம் பேரின்பநாயகம் - எருவில்








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .