2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

காத்தான்குடியில் தேசிய இஸ்லாமிய கலாசார கண்காட்சி

Kogilavani   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி, ஜிப்ரான்


காத்தான்குடியில் தேசிய இஸ்லாமிய கலாசார கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையில் இலங்கை முஸ்லிம்களின் பண்டய வரலாற்றைப் பாதுகாத்து பேணும் நோக்கில் காத்தான்குடியில் இக்கலாசார கண்காட்சி நடைபெறுகின்றது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் டாக்டர் ஜெகத்பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்,  பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளீதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்கு மாகான சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் விஜித் கணுகல, கிழக்கு மாகான கலாசார திணைக்கள அலுவல்கள் பணிப்பாளர் வெலிக்கல உட்பட முக்கியஸ்தர்கள் அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சி  இன்று ஞாயிற்றக்கிழமை மாலை நிறைவு பெறவுள்ளது.

இக்கண்காட்சியினை திறந்து வைத்த பின்னர் அதிதிகள் ஊர்வலமாக கலாசார நிகழ்வுகளுடன் ஹிஸ்புல்லா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆரம்ப வைபவத்தில்  கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X