2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

முருகபூபதியின் மொழிபெயர்ப்பு நூல் அறிமுக விழா

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹேமந்த்

படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான லெ.முருகபூபதியின் சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் மதகசெவனெலி (நினைவின் நிழல்கள்) அறிமுக விழா நாளைமறுதினம் சனிக்கிழமை மினுவாங்கொடையில் உடுகம்பொல கொரஸ கிராமத்தில் ஸ்ரீசுதர்மானந்த விகாரை மண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.

தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் முருகபூபதியிடம் 1974ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொரஸ கிராமத்தில் தமிழ் கற்ற சிங்கள மாணவர்களும் பௌத்த பிக்குகளும் இந்நிகழ்வை ஒழுங்குசெய்துள்ளனர்.

எழுத்தாளர் திக்குவல்லை கமாலின் ஏற்பாட்டில் ஆனமடுவ தோதன்ன பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலை முன்னாள்  அதிபரும் மொழிபெயர்ப்பாளருமான ஜனாப் ஏ.ஸி.எம்.கராமத் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் செயற்குழுக்கூட்ட அறையில்;  நடைபெற்றது.

கொரஸ கிராமத்தில் ஸ்ரீசுதர்மானந்த விகாராதிபதி வண. கடுவஸ்கொட சோமிந்த தேரர் தலைமையில் நாளை நடைபெறும் அறிமுக விழாவில் மினுவாங்கொடை கல்லொழுவை இலக்கியவட்டத்தின் தலைவர் கலாபூஷணம் மு.பஷீர், ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம், திக்குவல்லை கமால ஏ.ஸி.எம்.கராமத், திருமதி பத்மசீலி குணதிலக்க ஆகியோர் உரை நிகழ்த்துவர். முருகபூபதி ஏற்புரை வழங்குவார்.

தமிழ் இலக்கிய அபிமானி அமரர் வண.ரத்னவன்ஸ தேரோவுக்கு குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தேரோ அவர்களின் உருவப்படமும் திரைநீக்கம் செய்யப்படும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X