2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'வெல்லாவெளிக் கிராமத்தின் வரலாறும் பண்பாடும்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


'வெல்லாவெளிக் கிராமத்தின் வரலாறும் பண்பாடும்' நூல் வெளியீட்டு நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கவிக்கோ  வெல்லாவூர் கோபால் எழுதிய 'வெல்லாவெளிக் கிராமத்தின் வரலாறும் பண்பாடும்'  என்ற இந்நூல் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய  பழைய மாணவர் மன்றத்தினரால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

கலைமகள் வித்தியாலய அதிபர் த.விவேகானந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் போராசிரியர் வ.மகேஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.மௌனகுரு, கலாநிதி கோ.கோணேசபிள்ளை, கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராசா,  போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நூலின் வரவேற்புரையை ஆசிரியர் இ.தனுராஜ்ஜும் வெளியீட்டுரையை இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் மு.கணேசராசாவும் ஆய்வுரையை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.மோசஸ்ஸும் ஆற்றினர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X