2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

டிஜிடல் கதையாக்கப் பயிற்சி

Kogilavani   / 2013 ஜனவரி 03 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


டிஜிடல் கதையாக்கப் பயிற்சி, நீலன் திருச்செல்வம் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரனையில், இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் பதுளையில் மேற்கொள்ளப்பட்டது.

இப்பயிற்சி நெறிக்காக பதுளை மாவட்டத்தில் உள்ள மூவின பாடசாலைகள், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடன் தெரிவு செய்யப்பட்டன.

பதுளை மத்திய கல்லூரி, சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் அல் அதான் முஸ்லிம் மகா வித்தியாலம் ஆகியவற்றிலிருந்து கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் ஆர்வமுடைய தலா 6 மாணவர்கள் வீதம் மொத்தம் 18 மாணவர்கள் இப்பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

இப்பயிற்சி நெறியின் ஆரம்பத்தில், மாணவர்களுக்கு கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய அறிவு வழங்கப்பட்டது. பின்னர் கதiயாக்கத்துக்கான பயிற்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் கற்றுக்கொண்ட இரு பிரதான எண்ணகருக்களான கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்ட 10 கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும்  கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மை பிரதிபளிக்கும் 10 விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு டிஜிடல் கதைகள் உருவாக்கப்பட்டன. இதற்கான தொழினுட்ப ரீதியான பயிற்சிகள் பதுளை அறிவக (நெனசல) நிலையத்தில் நடைபெற்றது. கதைக்கேற்ற காணொளிகளை படம் பிடித்தல், புகைப்படங்களை எடுத்தல், சித்திரங்களை வரைதல் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகளை மேற்கொள்ளல் ஆகிய பயிற்சிகளும் அவைகளை கணினி மென்பொருள்களை உபயோகித்து செப்பனிடுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

டிசம்பர் மாத இறுதியில் இப்பயிற்சிநெறி முடிவடைந்ததுடன் பயிற்சியின் இறுதியில் கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் 10 டிஜிடல் கதையாக்கங்களும் வெளியிடப்பட்டன.

பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பயிற்சியின் இறுதி நாளில் மாணவர்களுடைய டிஜிடல் கதைகளை பார்வையிடுவதற்காக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் வருகைதந்திருந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X