2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தித்திட்டம்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் 'மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தித்திட்டம்' என்னும் நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுவைக்கப்பட்டது.

கொக்குவில் செல்வா மண்டபத்தில் யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.

யாழ். மாநகர சபை நிர்வாகத்தை 2009ஆம்  ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.  இந்த அபிவிருத்தி தொடர்பான வீடியோ இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நூல் வெளியீட்டுக்கு பங்களிப்பு வழங்கிய யாழ். மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண திணைக்களத் தலைவர்கள், யாழ் மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதன், யாழ் மாநகர சபை உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .