2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

புனிதர் சிசிலியாவின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் கூத்து அரங்கேற்றம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில்  கத்தோலிக்க சமயத்தின்  புனிதரான சிசிலியாவின் வாழ்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கூத்து நேற்று முன்தினம் பாடசாலை கலையரங்கில் இடம்பெற்றது.

இக்கூத்துக்கான கதை  பாடசாலையின் இந்து நாகரிய ஆசிரியை திருமதி அமுதா வரதராஜனினால்  எழுதப்பட்டுள்ளதுடன்  பாடசாலை அதிபர் நெறியாள்கை செய்துள்ளார். 

அண்ணாவியாராக வ.மகேந்திரனும்  இசை வழங்குனர்களாக  பாரதி ஜெகநாதன்,  இமையாளினி மகேந்திரன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

பாடசாலை அதிபர் அருட் சகோதரி எம்.எலிசபெத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி யோசப் பொன்னையா, பேராசிரியர் சி.மௌனகுரு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா கலேந்திரகுமார், முன்னாள் வடக்கு கிழக்கு பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் எதிர்மன்னசிங்கம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்  உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .