2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

வவுணதீவு பிரதேச செயலக கலாசார விழா

Kogilavani   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்,)

தமிழருக்குரிய பாரம்பரிய கலாசார விழுமியங்களை ஒருங்கிணைத்ததாக அவற்றைப் பறைசாற்றும் விதத்தில் வவுணதீவுப் பிரதேச செயலக கலாசார பேரவையின் கலாசார விழா நேற்ற கன்னன்குடா மகாவித்தியாலய கலையரங்கில் இடம்பெற்றது.

கலாசார உத்தியோகஸ்தர் தர்ப்பனா ஜெயமாறனின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளரும் கலாசார பேரவையின் தலைவருமாகிய வெ.தவராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், பிரதேச சபைத் தவிசாளர் கே.சுப்பிரமணியம், சிறுவர் நிதியத்தின் பிராந்திய முகாமையாளர் ஜே.வேர்னாட் பிரகாஸ், மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் முகாமையாளர் டினிமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கலாசார பேரவையினால் வருடா வருடம் வெளியிடும் 'அகணி' சிறப்புச் சஞ்சிகை மற்றும் 'பழைய வீடு' சஞ்சிகை என இரு சஞ்சிகைகள் வெளியிடப்பட்டன.

கலாசார விழாவினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட நாடகமும் அரங்கியலும், கவிதை, சிறுகதை, நாவல் எழுதல் தொடர்பான 4 பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்களினுடாக கிடைத்த ஆக்கங்களை கொண்டு பழைய வீடு சஞ்சிகை உருவாக்கப்பட்டது.

இவ்விழாவில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கலாசார விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில்

வெற்றியிட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது. இதேவேளை, பாரம்பறிய கலைகளும் கலைஞர்களால் மேடையேற்றப்பட்டன.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .