2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

சிங்கள படத்தினை இலங்கையில் தயாரிப்பேன்: மலையாள இயக்குநர் ரவூப் ராவுத்தர்

Kogilavani   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

'இலங்கையிலுள்ள அழகான இடங்களினை பார்த்ததும் இலங்கையில் தழிழ் உப தலைப்புகளுடன் சிங்களப் படம் தயாரிக்கும் ஆசையும் அதற்கான கதையும் மனதிற்குள் உள்ளது. எதிர்வரும் காலத்தில் சிங்கள படத்தினை இலங்கையில் தயாரிப்பேன்' என மலையாள பட இயக்குனர் ரவூப் ராவுத்தர் தெரிவித்தார்.

'ஈயமேசும் பெண்குட்டியும்' எனும் மலையாள திரைப்படத்தின் ;காட்சியொன்று புத்தளத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை படமாக்கப்பட்டது. இதன்போதே அவர் இக் கருத்தினை வெளியிட்டார். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு அகதிகளாக சென்ற கதாநாயகனையும், கதாநாயகியையும் அடிப்படையாக கொண்டு ஈயமேசும் பெண்குட்டியும் படம் தயாரிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் இடம்பெயர்ந்து வாழும் கதாநாயகி தாய்நாட்டினை பற்றி நினைக்கும் 5 நிமிட காட்சிகளே இலங்கையில் படமாக்கப்படுகிறது. ஏனைய காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படுகின்றன. இலங்கை போன்ற இடம் வேறு எங்கேயும் கிடையாது. அதுதான் இலங்கைக்கே வந்து ஒளிப்பதிவு செய்கின்றோம்.

இலங்கைக்கு வந்து இறங்கியது முதல்; திறந்த மனதுடன் பலரும் எமக்கு உதவி செய்கின்றார்கள். குறிப்பாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், தேசிய படக்கூட்டுதாபன அதிகாரிகள், புத்தளம் மேயர் பாயிஸ், மேயர் மௌலானா ஆகியோர் எமக்கு பல்வேறு உதவிகளினை செய்தனர்.

இலங்கையில் படமாக்கபட்ட குறித்த காட்சிக்காக படத்தின் பிரதான நடிகரும் நடிகையும் மாத்திரமேஇலங்கை வந்துள்ளனர். ஏனையவர்களாக இலங்கை நடிகர்களே நடிக்கின்றார்கள். அவர்களின் நடிப்பு பாராட்டத்தக்கது' என்றார்.

குறித்த படத்தின் கதாநாயகனாக நரேன் நடிப்பதுடன் கதாநாயகியாக அறிமுக நடிகை ஸசா நடிக்கின்றார்.

புத்தளம் பிரதான வீதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் கமெராவுக்கு முன் நடைப்பெற்ற மத வழிப்பாட்டினையடுத்து புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் படப்பிடிப்பினை ஆரம்பித்து வைத்தார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X