2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

மன்னாரில் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழா

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 30 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய நிறைவுநாள் நிகழ்வுகள் மன்னார் நகர மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னார் நகரசபையினுடைய நூலக ஆலோசனைக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மன்னார் நகரபிதா எஸ்.ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார்.  மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஜே.துரம் பிரதம விருந்தினராக இதில் கலந்துகொண்டார்.

2012ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், எழுத்தாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மன்னார் நகரசபைச் செயலாளர் பேனடெற் வரவேற்புரையையும் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் கலையருவி நிறுவனத்தின் இயக்குனரும் எழுத்தாளருமான அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர்.
மன்னார் அமுதன், எழுத்தளார் ஜே.ஆர்.மயூரன் ஆகியோரும் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .