2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா

Kogilavani   / 2012 நவம்பர் 30 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இந்த இலக்கிய விழாவை நடாத்தியது.

மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்;, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கனகா சிவபாதசுந்தரம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், கல்குடா வலய கல்விப் பணி;ப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, உட்பட கல்வி அதிகாரிகள், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், கலை இலக்கியவாதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால்  நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் திருமதி சித்திரலேகா மௌனகுரு, மற்றும் ஐயம்பிள்ளை சிவசுந்தரம், கணபதிபிள்ளை தனிகாசலம், ஏ.சி.அப்துர் றஹ்மான், எஸ்.எல்.மீராசாகிப் ஆகிய ஐந்து கலைஞர்களும் இந்த விழாவின் போது பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .