2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

சமுர்த்தி சிறுவர் போட்டியில் கல்லடிவேலூர் முதலாமிடம்

Kogilavani   / 2012 நவம்பர் 21 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

2012 சமுர்த்தி சிறுவர் போட்டியில் கல்லடிவேலூர் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
இப்போட்டி வருடந்தோறும் நடைபெறுகின்றது.

இவ்வாண்டுக்கான 5-9 வயதிற்குட்பட்ட குழு நடன போட்டியில் கல்லடிவேலூர் துளசி சமுர்த்தி சிறுவர் கழகம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்லடிவேலூர் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளது.

இவர்களுக்கான விருது எதிர்வரும் 1 ஆம் திகதி கம்பஹாவில் நடைபெரும் நிகழ்வின் போது வழங்கப்படவுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல்; 2012 வரை கல்லடிவேலூர் கிராமத்தில் இருந்து துளசி சமுர்த்தி சிறுவர் கழகம் தேசிய மட்டத்தில் கலந்து கொண்டு முதலாமிடம் இரண்டாமிடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .