2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பவித்திரனின் 'குறி இடல்' கவிதை நூல் வெளியீடு

Super User   / 2012 நவம்பர் 18 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


மூதூர் பிரதேசத்தை சேர்ந்த இளம் கவிஞர் தில்லைநாதன் பவித்திரனின் 'குறி இடல்' என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற போது நூலாசிரியரின் பெற்றோரின் கவிதை நூலின் முதற் பிரதியை பெற்றனர்.

விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் நிகழ்வுரையை இலங்கை இளங்கோ மன்றத்தின் தலைவர் பெரிய ஐங்கரனும் நயப்புரையை மலைமுரசு வார பத்திரிகையின் ஆசிரியரான ஞானேஸ்வரன் (மாயன்) மற்றும் நூலாசிரியர் பவித்திரன் ஏற்புரையும் நிகழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .