2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

யாழ், கொழும்பு மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் ஐரோப்பிய திரைப்பட விழா

Super User   / 2012 நவம்பர் 18 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாவது தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள ஐரோப்பிய திரைப்பட விழா அடுத்த மாத முற்பகுதியில் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் டிசெம்பர் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை ஐரோப்பிய திரைப்பட விழா கொழும்பிலுள்ள தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நாட்களில் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திரையிடப்படவுள்ள படங்களுக்கான அனுமதி இலவசமாகும்.

இதேவேளை, இந்த திரைப்பட விழா கேகாலை சென். ஜோசப் மகளிர் மகா வித்தியாலத்தில் டிசம்பர் 8ஆம் திகதியும் யாழ். நுண்கலை நிலையத்தில் டிசம்பர் 15ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இந்த திரைப்பட விழாவை கொழும்பிலுள்ள எட்டு ஐரோப்பிய நாடுகளின் தூதுவராலய கலாசார பிரிவுகள் மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழ் திரைப்பட வரலாற்றின் 50 வருட பூர்த்தியை முன்னிட்டு அசோக்க ஹந்தகமவினால் தயாரிக்கப்பட்ட இனி அவன் எனும் தமிழ் திரைப்பட காட்சியுடன் த்துடன் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய திரைப்பட விழா ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் பிரான்ஸ், ஜேர்மன் உட்பட ஐரோப்பிய நாடுகளின் திரைப்படங்களும் இந்த திரைப்பட திரையிடப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .