2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'நெறிகள் ஆயிரம் படி' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


நிந்தவுர் ஹிதாயத்துல்லாஹ் மீர்சா  எழுதிய 'நெறிகள் ஆயிரம் படி' நூல் வெளியீட்டு விழா கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கூட்ட மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஓய்வுநிலை, கலாசாரப் பணிப்பாளர் அல்ஹாஜ் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை கல்முனை ரசிகர் மன்றம் ஒழுங்கு செய்திருந்தது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வரவேற்புரையை கலாபூஷனம் யு.எல்.ஆதம்பாவாவும்  நூல் அறிமுகவுரையை தீரன் ஆர்.எம்.நௌஸாத்தும் நூல் நயத்தலுரையை தேசமான்ய எஸ்.எல்.மன்சூரும் நூல் விமர்சனவுரையை கவிஞர் பாலமுனை பாறூக்கும்  கவி வாழ்த்தை கவிதாயினி கலைமகள் ஹிதாயா றிஸ்வியும்  ஆற்றினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .