2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                       (ஜதுசன்)
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சீ.மூ.இராசமாணிக்கத்தின் 100 ஆவது ஜனன தினம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அனுஷ்டிக்கப்படவுள்ளதை முன்னிட்டு அகில இலங்கை ரீதியிலான கட்டுரை போட்டியும் மற்றும் பேச்சுப் போட்டியும் இடம்பெறவுள்ளன.

'சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் அரசியல், சமூகப் பணிகள்' என்ற தலைப்பின் கீழ் திறந்த மட்டத்தில் கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது. கட்டுரைகள் 1500 – 1600 சொற்களுக்கும் குறையாத வகையில் 'அமரர் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் நூறாவது ஜனன தின விழாக்குழு',  விழாக்குழு செயலாளர், எஸ்.விஜயரெத்தினம், மணல் வீதி, களுவாஞ்சிகுடி என்ற முகவரிக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, பேச்சுப் போட்டியானது 'அமரர்.சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் அரசியல், சமூகப் பணிகள்' என்ற தலைப்பின் கீழ் பட்டிருப்பு தொகுதி மட்டத்திலுள்ள 16 - 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

10 நிமிடங்களுக்கான இப்போட்டியானது எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமரர் சீ.மூ.இராசமாணிக்கத்தின் 100 ஆவது ஜனன தின நிகழ்வில் நடத்தப்படவுள்ளது.

கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் போட்டியாளர்களுக்கு முறையே 15,000ரூபா,  10,000ரூபா 5000 ரூபா பண பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு முறையே 5000ரூபா, 3000ரூபா, 2000ரூபா பண பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .