2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வவுனியா பிரதேச கலை இலக்கிய விழா

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 06 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா பிரதேச கலாசாரப் பேரவையும் வவுனியா பிரதேச செயலகமும்; இணைந்து நடத்தும் பிரதேச கலை இலக்கிய விழா எதிர்வரும் 8ஆம் 9ஆம் திகதிகளில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

8ஆம் திகதி 'மாணவர்களின் கலை தெரி அரங்கம்'; என்னும் தொனிப்பொருளில் தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளார் அரங்கில் பாடசாலை மாணவர்களுக்கான இலக்கிய நிகழ்வுகள் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெறவுள்ளன.  இதில்  பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துலஹரிச்சந்திரவும் சிறப்பு விருந்தினராக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மேகநாதனும் கௌரவ விருந்தினராக வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.பேணாட், வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் பராசக்தி கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

9ஆம் திகதி பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் 'கலைஞர் சுவைஞர் அரங்கம்' என்னும் தொனிப்பொருளில் வட்டூர் கவிஞர் சித்தாந்த வித்தகர் கதிர் சரவணபவன் அரங்கில் நடைபெறவுள்ளது.  இதில் பிரதம விருந்தினராக  கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதியுதீனும் சிறப்பு விருந்தினராக  வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவும் கௌரவ விருந்தினராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன,; வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.ஜானக, செட்டிகுளம் பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா கமநல சேவைகள் உதவி ஆணையாளர் சுலோஜினி குகன்,  வவுனியா நகரசபை செயலாளர் வீ.வசந்தகுமார் கலந்துகொள்ளவுள்ளனர்.

கலைஞர்கள் கௌரவிப்பில் பிரதேச செயலக இலச்சினை வடிவமைத்த ஆர்.எச்.ஏ.ஜெனகா, பி.பி.திசானி பிரபா சமரசிங்க ஆகியோரும் சாகித்தியமண்டல பரிசு பெற்ற க.ஸ்ரீகந்தவேளும் 2011ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது பெற்ற க.கனகேஸ்வரனும்  மற்றும் ச.கண்முகநாதனும் இடம்பெறவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .