2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'பங்கா' கலாசார விருது வழங்கல் நிகழ்வில் ஐவர் கௌரவிப்பு

Super User   / 2012 நவம்பர் 05 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐப்பான் ஸ்ரீலங்கா நட்புறவு கலாசார நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 19ஆவது 'பங்கா' கலாசார விருது வழங்கல் நிகழ்வு அண்மையில் ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

இதன்போது சினிமா மற்றும் அரங்கம் துறையில் சதத் மஹாதிவுல்வெ மற்றும் பிரியந்த சிரிகுமாரவிற்கும் நடன துறையில் உபுலி பனிபாரத மற்றும் மேரி ஜொஸிற்றாவிற்கும் அனிமேஸன் மற்றும் டப்பிங் துறையில் அதுல ரன்சிரிலாலிற்கும் பங்கா விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலாசார மற்றும் கலைகள் அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபிஹிட்டே ஹோபோ மற்றும் ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் மொகான் சமரனாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


ஜப்பான் நட்புறவு சங்கம், ஜப்பான் வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கம் ஆகியன கொழும்பிலுள்ள ஜப்பானி தூதுவராலயத்துடன் இணைந்து 1993ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் இந்த விருது வழங்கப்படுகின்றது.

கடந்த 18 வருடங்களாக நடைபெறும் இந்த விருது விழாவில் 108 விருதுகள் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .