2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

சாகித்திய விழா

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 02 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் சாகித்திய கலாசார பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட சாகித்திய கலாசார பெருவிழாவும் பிரதேச சாகித்திய விருது வழங்கும் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

சாகித்திய சலாசார பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் தி அல்வீஸ் கலந்துகொண்டார்;. கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமுகசேவை, சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகாரம், கூட்டுறவு, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்துகொண்டனர்.  விசேட அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், றக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சம்மாந்துறை பிரதேசத்தின் பல்துறைகளைச் சேர்ந்த 19 அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

கலாநிதி கே.கோவிந்தராஜன் (உபவேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம்), கலாநிதி எஸ்.எல்.அகமட்லெப்பை (சிரேஷ்ட விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), கலாநிதி எம்.ஐ.எம்.கலீல் (சிரேஷ்ட விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம் (சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம்), கலாநிதி எஸ்.எல்.றியாஸ் (ஆசிரியர் சஃது ஹிஜ்றா வித்தியாலயம்) ஆகியோருடன் ஊடகவியலாளர்களான ஏ.ஜே.எம்.ஹனீபா, என்.எம்.புவாட், எம்.சீ.அன்சார், கவிஞர் யூனூஸ் கே.றஹ்மான், எஸ்.எம்.எம்.ஜவாட், இர்ஷாட்.ஏ.காதர், ஏ.சீ.எம்.கலீலுர்றஹ்மான், யூ.எல்.எம்.றியாஸ் ஆகியோர் பிரதேச சாகித்திய கலாசார பெருவிழாவில் சாகித்திய விருதுகளை பெற்றனர்.

அத்துடன் இலங்கையின் முதலாவது ஹாபிழ் முஹம்மட் அலி, அமெரிக்காவில் வசிக்கும் சம்மாந்துறை இலங்கை சம்பியன் எம்.எம்.முகம்மது சரீப், சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களான அதிபர் கே.எல்.தசூல், ஆசிரியை திருமதி சித்தி சரீபா எம்.நஸீக்,; சமுகநல மேம்பாட்டு ஒன்றியம், சூழல் நண்பர்கள் கூட்டமைப்பு என்பனவும் பிரதேச சாகித்திய கலாசார பெருவிழாவில் சாகித்திய விருதுகளை பெற்றன.

இவ்விழாவில் சர்வதேச, தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச ரீதியான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற முதன் நிலையாளர்கள் 224 சாதனையாளர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, சம்மாந்துறை மண்ணின் வரலாற்றுச் சிறப்புக்களை உள்ளடக்கிய ஒரு வரலாற்று ஆவணமான சுமார் 300 பக்கங்களை கொண்ட 'பட்டறை' என்னும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டன. நூலின் முதல் பிரதியை விழாவின் தலைவர் ஏ.மன்சூர்; விழாவின் பிரதம அதிதி, கௌரவ அதிதிகள் மற்றும் விசேட அதிதிகளுக்கு வழங்கினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .