2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

சாகித்திய கலாசார பெருவிழா

Kogilavani   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் 2012ஆம் ஆண்டிற்கான சாகித்திய கலாசார பெருவிழா எதிர்வரும் வியாழக்கிழமை (01) பிற்பகல் 2.30 மணிக்கு சம்மாந்துறை நகரமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்  அம்பாறை அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர்  ஏ.எம்.ஏ.நௌஷாத், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் டபிள்யு.யு.வெலிகல, தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இக்கலாசார விழாவின் போது சம்மாந்துறை பிரதேசத்தின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் வரலாறு பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட சிறப்பு மலரும் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல்வேறு துறைகளில் சேவையாற்றிய 25ற்கும் மேற்பட்டோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X