2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

நூருல் ஹக் எழுதிய அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும் எனும் நூலுக்கு விருது

Super User   / 2012 ஒக்டோபர் 15 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான சாய்ந்தமருது எம்.எம்.நூருல் ஹக் எழுதிய 'அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்' எனும் நூல் 2011ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளியிடப்பட்ட 11 சிறந்த தமிழ் இலக்கிய படைப்புக்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலை இலக்கிய விழாவில் குறித்த நூலின் ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இவ்விருதுக்கு தெரிவாகியுள்ள பன்னுலாசிரியர் நூலாசிரியர் நூருல் ஹக்,  தீவும் தீர்வுகளும், சிறுபான்மையினர் சில அவதானங்கள், முஸ்லீம் பூர்வீகம் மற்றும் ஈமானியப் போராளிகள் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

ஊடகத்தறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள இவர் தேசிய பத்திரிகைகளில் அரசியல், சமூக, சமய ஆய்வுக் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக எழுதி வருகின்றார்.ஊடக, கலை, இலக்கிய துறைகளை போன்று சமூக சேவையிலும் ஈடுபடுள்ள இவர் மர்ஹூம்களான மௌலவி ஐ.எல்.முத்து பஹ்ஜி, ஐஎல்.பாத்தும்மா ஆகியோரது கனிஷ்ட புதல்வராவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .