2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மாகாண தமிழ் இலக்கிய விழாவின் பேசப்படாதது எனும் தலைப்பிலான ஓவிய கண்காட்சி

Super User   / 2012 ஒக்டோபர் 14 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


கிழக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக பண்பாட்டு பிரிவு நடத்தும் 2012ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் பேசப்படாதது என்ற தலைப்பிலான ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறும் இந்த தமிழ் இலக்கிய விழா மட்டக்களப்பின் சமூகங்கள், பண்பாடுகள், பண்பாட்டு உருவாக்கங்கள் பேசாப்பொருளும் பல்வகைமைகளும் எனும் தொனிப்பொருளில் நடைபெறுகிறது.

ஆய்வரங்கு மற்றும் ஆற்றுகைகள் அடங்கிய தமிழ் இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக ஓவியக்கண்காட்சி நேற்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. ஓவியர்களான சுசிமன் நிர்மலவாசன், ப.புஸ்பகாந்தன், வாசுகி ஜெயசங்கர், ஆர்.ருசாந்தன் (கிக்கோ), பா.கோபி ரமணன் ஆகியோரது ஓவியங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாளை வரை நடைபெறும் இவ்விழாவில் பல்வகைப்பட்ட புத்திஜீவிகளும் கல்விமான்களும் கலந்துகொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .