2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஒன்பது தேசிய விருதுகளை பெற்ற 'பிறந்தநாள் பரிசு கொண்டாட்டம்' நாடகம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 11 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பில் இருந்து நெய்தல் ஊடக தரிசனம் தயாரிப்பில் 'பிறந்தநாள் கொண்டாட்டம்' எனும் சிறுவர் நாடகம் ஒன்பது தேசிய விருதுகளையும், ஒரு சிறப்பு விருது அடங்கலாக பத்து விருதுகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமைசேர்த்துள்ளது.

அரச சிறுவர் நாடக விழா கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில், கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்கர் ரி.பி ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இருந்து நெய்தல் ஊடக தரிசனம் தயாரிப்பில் 'பிறந்தநாள் கொண்டாட்டம்' எனும் சிறுவர் நாடகமும்; பங்கு பற்றி இருந்தது.
து.காஞ்சனா என்பவர் இந்நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருந்தார்.

இச் சிறுவர் நாடகம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதோடு, ஒன்பது தேசிய விருதுகளையும், ஒரு சிறப்பு விருதையும் பெற்றுக்கொண்டது.

து.காஞ்சனா, சிறந்த நெறியாளருக்கான விருது மற்றும் சிறந்த பிரதிக்கான விருதும் பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகருக்கான விருது கோ.ஜயசீலனுக்கும்;, சிறந்த நடிகைக்கான விருது செ.நிசாந்தினி கிடைத்தது.

துணை நடிகைக்கான விருது ச.லோசனாவிற்கும் ஓப்பனைக்கான விருது செ.நிசாந்தினிக்கும், உடையமைப்புக்கான விருது ஞா.பிரனுஜாவுக்கும் கிடைத்தது.

காட்சியமைப்பிற்கான விருது அ.விமல்ராஜுக்கும் பி.ஜே. அலெக்ஸ்க்கும் கிடைத்தது. மேடை முகாமைத்துவத்திற்கான விருதும் பி.ஜே அலெக்ஸ்க்கு கிடைத்தது. இசைக்கான சிறப்பு விருது ஒன்றும் மோ.பிரசன்னாவிற்கு கிடைத்தது.

கடந்த வருடம் நெய்தல்  ஊடக தரிசனம் தயாரிப்பில் இரண்டு நாடகங்கள் பங்கு பற்றி இருந்தன. அவற்றுக்கு மொத்தமாக ஏழு விருதுகள் கிடைத்திருந்தது. இம்முறை ஒரு நாடகம் மூலம் பத்து விருதுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நாடகத்துறை மாணவர்களே இச்சிறுவர் நாடகச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .