2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வவுனியா பிரதேசசபையினால் வாசிப்பு மாதம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                     (நவரத்தினம்)

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினால் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இம் மாதம் 31 ஆம் திகதி வரை வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது என வவுனியா தெற்கு பிரசேசபையின் தலைவர் க.சிவலிங்கம் தெரிவித்தார்.

இதன்போது சனசமூக நிலையங்கள் மற்றும் நூலகங்களில் விசேட நிகழ்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிரமதானம், நூலக நடமாடும் சேவை,  பாடசாலை மட்டத்தில் கட்டுரைப்போட்டி. பேச்சுப்போட்டி, நிறந்தீட்டல், ஆத்திசூடி, திருக்குறள் மனனைப்போட்டி மற்றும் திறந்த நிலை கவிதைப்போட்டிகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை ஓமந்தை முன்பள்ளியில் கண்காட்சியொன்றினையும்  ஏற்பாடு செய்துள்ளதுடன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு வாசிப்பு மாத இறுதி நிகழ்வின் போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .