2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

துளிர்கள் சஞ்சிகை வெளியீடு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 01 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு வவுணதீவுப் பிரதேச செயலகத்தினால் இன்று துளிர்கள் சஞ்சிகை வெளியிடப்பட்டது. இன்று காலை சிறுவர்தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற அதேவேளை மதியம் வவுணதீவுப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இச்சஞ்சிகை வெளியீடு இடம்பெற்றது.

சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ரி.மதிராஜ் ஏற்பாட்டில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் வெ.தவராசா தலைமையில் சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன் முதியோர் கௌரவிப்பும், சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் அவர்களுக்கு முதலாவது சஞ்சிகையினை வழங்கி பிரதேச செயலாளர் சஞ்சிகையினை வெளியிட்டு வெளியிட்டு வைத்தார்.

இதேவேளை இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மண்முனை மேற்குப் பிரதேச சுகாதார வைத்திய அதிசாரி சண்முகநாதன் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் கௌரவிருந்தினாராக மாவட்ட சமூகசேவை அதிகாரி சா.அருள்மொழி சிறுவர் நிதிய பிராந்திய முகாமையாளர் வேர்னாட் பிரகாஸ்,சிறுவர் பாதுகாப்பு நிறுவன திட்ட முகாமையாளர் அன்ரூ மற்றும் வை.எம்.சீ.எ நிறுவனப் பிரதிநிதிகள் பி.பி.டி.ஆர்.ஓ நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .