2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

பிரபல நடிகர் காமினி பொன்சேக்காவின் எட்டாவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

மலையக கலை கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் பிரபல நடிகர் காமினி பொன்சேக்காவின் எட்டாவது சிரார்த்த தினமும் இரத்தின தீப விருது வழங்கும் நிகழ்வும் நேற்று மாலை கண்டி கெப்பத்திபொல மண்டபத்தில் இடம்பெற்றது.

திரைப்படத்துறைக்கு பாரிய சேவையாற்றிய காமினீ பொன்சேக்கா கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி காலமானார்.

இவர் 96 திரைப்படங்களை நடித்துள்ளதுடன் அவற்றில் மூன்று தமிழ் திரைப்படங்களும் மூன்று   ஆங்கில திரைப்படங்களும் உள்ளடங்குகின்றன.
இந்நிகழ்வில், இலங்கையின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் பிரியசாத், நடிகர் ரிசாட் வீரக்கொடி உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது, கலை, கலாசார, சமூக மற்றும் ஊடகத்துறையில் நீணட கால சேவையாற்றிய பலர் இங்கு இரத்தின தீபம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, பல்வேறு துறைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்திய பாடசாலை மாணவ மாணவிகளும் இதன்போது கொளரவிக்கப்பட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .