2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' நூலுக்கு சாஹித்திய விருது

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 30 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' நூல் இவ்வாண்டின் சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலுக்கான சாஹித்திய விருதைப் பெற்றிருக்கிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வெயங்கொட சியனே தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அஷ்ரஃப் சிஹாப்தீன் தனது விருதைப் பெற்றுக் கொண்டார்.

'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' அறபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பாகும். ஈராக், சிரியா, எகிப்து, சூடான், பலஸ்தீன், எமன், மொரோக்கே, ஓமான், லிபியா ஆகிய நாடுகளின் சிறுகதை எழுத்தாளர்களின் பத்துச் சிறுகதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

அஷ்ரஃப் சிஹாப்தீன் முதலாவது தேசிய சாஹித்திய விருதை 2009ஆம் ஆண்டு தனது கவிதைத் தொகுப்பான 'என்னைத் தீயில் எறிந்தவர்' நூலுக்குப் பெற்றார். 2010இல் வெளிவந்த பலரதும் கவனத்தை ஈர்த்த 'ஒரு குடம் கண்ணீர்' என்ற நூல் 2011ஆம் ஆண்டு தேசிய சாஹித்திய விருதுக் குழுவினரால் சிறந்த நூலுக்கான சான்றிதழ் பெற்றது. 2011ஆம் ஆண்டு காயல்பட்டினத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 'தமிழ்மாமணி' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மூவரில் அஷ்ரஃப் சிஹாப்தீனும் ஒருவராவார்.

கல்குடாப் பிரதேசத்தில் தேசிய சாஹித்திய விருது பெற்ற மூன்றாவது படைப்பாளி அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆவார். காலஞ் சென்ற வை.அஹமத் அவர்கள் தனது 'புதிய தலைமுறைகள்' நாவலுக்காகப் பெற்ற விருதே கல்குடா பிரதேசத்துக்குக் கிடைத்த முதலாவது தேசிய சாஹித்திய விருதாகும். அதனைத் தொடர்ந்து 'மக்கத்துச் சால்லை' சிறுகதை நூலுக்கான விருதை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா பெற்றார்.

இம்முறை விருதுபெற்ற பத்துப் பேரில் ஐந்து முஸ்லிம்கள் அடங்குகிறார்கள். திக்குவல்லை கமால், ஆர்.எம்.நௌஷாத், பாலமுனை பாரூக், எஸ்.ரிஷான் ஷெரீப் ஆகியோரே விருது பெற்ற ஏனைய முஸ்லிம் படைப்பாளிகளாவர். எஸ்.ஏ.உதயன், நந்தினி சேவியர், ச.முகுந்தன், சுஜந்தன், கந்தையா ஸ்ரீகந்தவேள் ஆகியோரே விருதுபெற்ற தமிழ்ப் படைப்பாளிகளாவர்.

You May Also Like

  Comments - 0

  • fayas Monday, 01 October 2012 02:05 PM

    valthukkal

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .