2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் மகாகவி பாரதியின் பெண் விடுதலை கருத்தாடல்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடத்தும் மாதாந்த முழுநிலா கருத்தாடல் நிகழ்வில் இம்முறை மகாகவி பாரதியாரின் பெண் விடுதலை தொடர்பான கருத்தாடல் நிகழ்வு வவுனியா சத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தாடல் நிகழ்வில் வரவேற்புரையினை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியை செல்வி கஜபதி பாண்டித்துரை நிகழ்த்த மகாகவி பாரதியாரின் பெண் விடுதலை தொடர்பான கவிகளை கவிஞர்களான குரும்பையூர் த.ஐங்கரன், மாணிக்கம் ஜெகன், ப.ஏ.அன்ரன் ஆகியோர் வடித்திருந்ததுடன் தொடக்கவுரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் ஆசிரிய கல்வியியலாளர் நெலோமி அன்ரனிகுரூஸ் நிகழ்த்தியிருந்தார்.

சிறப்புரையினை வவுனியா தெற்கு வலய தமிழ்பாட ஆசிரிய ஆலோசகர் கவிஎழில் திருமதி த.நிறைமதி நிகழ்த்தியதுடன் நிறைவுரையினை பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் ஆற்றியிருந்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .