2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'தந்தை செல்வா ஒரு காவியம்' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)
'தந்தை செல்வா ஒரு காவியம்' எனும் நூல் வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா, மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவர் வி.இராதாகிருஸ்ணன், பேராசிரியர் எஸ். விஜயசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோ நோகதாரலிங்கம், வவுனியா தமிழ் சங்கத்தின் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன்;, வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசனும் கலந்து கொண்டனர்.

நூலின் முதற் பிரதியினை வவுனியா பிரபல வர்த்தகர் தம்பா ஹோட்டல் உரிமையாளரிடம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி வழங்கி வைத்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .