2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

நீர்கொழும்பு சாகித்திய விழா

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா )


நீர்கொழும்பு சாகித்திய கலா உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ.கே.அலவத்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசவளங்கள் மற்றும் விவசாய அபிவிருத்தி பிரதியுமைச்சர் சரத்குமார குணரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன் நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.எஸ்.எம்.சகாவுல்லா, சர்வமதத் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள்,  உத்தியோகத்தர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள்,  பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சாகித்திய விழாவையிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில்; திறந்த போட்டியாக நடத்தப்பட்ட பல்வேறு இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதன்போது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .