2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தமிழ் - சிங்கள எழுத்து நூல் அறிமுக விழா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


எதிர்வரும் 10 வருடங்களில் இலங்கையை மும்மொழி தேசமாக உருவாக்கும் நோக்கத்திற்காக யாழ். மாவட்டத்தில் மும்மொழி நூல் அறிமுக விழா நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

தமிழ் - சிங்கள எழுத்து நூல் அறிமுக விழாவினை, மும்மொழி இலங்கைக்கான ஜனாதிபதி செயலணியுடன் அரசாங்க மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுடன் ஒன்றிணைந்து இவ் வேலைத்திட்டத்தினை நடத்தினர்.

மும்மொழி இலங்கைக்கான ஜனாதிபதி ஜெயலணியின் உபதலைவரும் ஜனாதிபதி ஆலோசகருமான சுனிமல் பர்ணாந்து மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, சிங்கள தமிழ், எழுத்துக்கள் தொடர்பான கருத்துரைகளை வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி கைலாசநாதன் ஆகியோர் நிகழ்த்தினர்.

அரச உத்தியோகத்தர்களின் மொழித்திறமையை விருத்தி செய்யும் நோக்கத்திற்காகவே மும்மொழித்திட்டத்தினை செயற்படுத்துவதன் முக்கிய நோக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .