2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

முருங்கனில் நாட்டுக்கூத்து அரங்கேற்றம்; கலைஞர்கள் கௌரவிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

மன்னார், முருங்கன் தூய இயாகப்பர் ஆலய சபையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் தூய சில்வேஸ்திரியார் வாசாப்பு நாட்டுக்கூத்து நாடகம் முருங்கனில் இடம்பெற்றது.

முருங்கன் பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்ற இந்த நாட்டுக்கூத்து நாடகத்தை அருட்தந்தை தமிழ் நேசன் அடிகலாரின் தந்தையான முருங்கன் தூய இயாகப்பர் ஆலயத்தைச் சேர்ந்த அமரர் புலவர் சந்தான் பாவிலு அவர்கள் எழுதியுள்ளார்.

குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டார்.

அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் உள்ளளூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 6 கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .