2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழ். தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழா

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழாவை எதிர்வரும் 11ஆம் திகதி நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தச் சங்கத்தின் தலைவரும் யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியருமான அ.சண்முகதாஸ் இன்று தெரிவித்தார்.

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  பாரதி விழா நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் 11ஆம் திகதி நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை பாரதி விழா இரு அரங்குகளாக நடைபெறவுள்ளது. 

அன்றையதினம் 'பாரதியின் புலமைத்துவம்' என்ற  தலைப்பில் நூல் ஒன்றும் 'மகாகவி பாரதி' என்ற தலைப்பில் இறுவெட்டு ஒன்றும் வெளியிடப்படவுள்ளன.  தமிழ் சங்கத்தில் அங்கத்தவர்களாகவுள்ள மாணவர்களுக்கு இடையில் பேச்சுப்போட்டி நடத்தப்படவுள்ளதாகவும் பேராசிரியர் சண்முகதாஸ் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .