2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'என்னைக் கவர்ந்த குவாடலுப்பே அன்னை' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி தேசமானிய கலாநிதி ஜோர்ஜ் திஸநாயக்க எழுதிய 'என்னைக் கவர்ந்த குவாடலுப்பே அன்னை' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  தூய மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றது.

முதலாவது பிரதியை திருகோணமலை தூய குவாடலுப்பே அன்னை திருத்தலத்தின் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.எஸ்.ஜோன்பிள்ளை நூலாசிரியரிடமிருந்து பெற்று வெளியிட்டு வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட எஹெட் கரித்தாஸ் இயக்குநர் அருட்பணி கிறைற்றன் அவுட்ஸ்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதன்மை அதிதியாக மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரா சசி மகேந்திரா கலந்துகொண்டார்.

வரவேற்புரையை பேராலய அன்பிய ஒருங்கிணைப்பாளர் திருமதி கலா கிறிஸ்டியும் நூல் நயவுரையை திருகோணமலை புனித வளனார் தமிழ் வித்தியால அதிபர் ஞா.சுகிலாவும் ஏற்புரையை நூலாசிரியர் அருட்பணி ஜோர்ஜ் திஸநாயக்கவும் நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .