2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

மண்முனையில் குறுந்திரைப்பட விழா

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் நெய்தல் ஊடக தரிசனமும் இணைந்து நடத்தும் குறுந்திரைப்பட விழா நாளைமறுதினம் சனிக்கிழமை காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் சி.ஜெயசங்கர் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட 12  குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
பின்னர் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், 'தமிழ் குறுந்திரைப்படங்களும் அதன் போக்குகளும்' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறவுள்ளது.

இந்தியத் தயாரிப்புகளான இயக்குநர் கார்த்திக் சுபராஜின் 'நீர்';, இயக்குநர் பாலு மகேந்திராவின் 'காத்திருப்பு' இயக்குநர் சந்தியாப்பிள்ளையின் 'கோப்பை' உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .