2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தென்னிந்திய நாட்டிய பேரொளி அலர்மேல்வள்ளியின் நாட்டிய பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

தென்னிந்திய நாட்டிய பேரொளி அலர்மேல்வள்ளியின் நாட்டிய பயிற்சிப் பட்டறை நேற்று வியாழக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சங்கீத வித்துவான் ரி.எம்.கிருஸ்ணா நாட்டிய பேரொளி அலர்மேல் வள்ளயுடன் நேர்காணல் ஒன்றிணை மேற்கொண்டார்.

இந்நேர்காணலின் போது யாழ்.பல்கலைக்கழக நாட்டிய மாணவர்கள், இராமநாதன் நுண்கலை மாணவர்கள் ஆசிரியர்கள் நாட்டிய நடனம் பற்றிய பல்வேறு விளகங்களை நாட்டிய பேரொளி அலர்மேல் வள்ளியிடமிருந்து பெற்றுகொண்டனர்.

வடமாகாண ஆளுநர் அலுவலகம், இலங்கை இந்திய நட்பறவு அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்பயிற்சி பட்டறையில், நாட்டிய பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய, வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன்,

வடமாகாணத்தில் இதுபோன்ற நாட்டிய நிகழ்வுகள் நடைபெறுவதனாது எமது இளைஞர்கள் மத்தியில் நல்லதொரு எதிர்காலத்தினை ஏற்படுத்துமென நம்புகிறேன்.

பல வருடகாலமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ்வாறான நிகழ்வுகள் இங்கு இடம்பெறவில்லை. பல்வேறு சமூகத்தின் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு எமது இளைஞர்களுக்கு முக்கியமானதாக இருக்கின்றது.

வடமாகாணத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறும். இதுபோன்ற கலை நிகழ்வுகள் எமது கலாசாரத்தினையும், பண்பாட்டினையும் மேம்படுத்த உதவும் என்றார்.

இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக அதிகாரி ஜெயமனோன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், யாழ்.பல்கலைக்கழக வாழ்நாட் பேராசிரியர்; சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் உட்பட உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள்,  மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .