2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அரங்க ஆய்வுகூட மாணவர்களுக்கான நடன பயிற்சி முகாம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, அரங்க ஆய்வுகூட மாணவர்களுக்கான நடன பயிற்சி பட்டறை நேற்று செவ்வாய்க்கிழமை கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பமானது.

பேராசியர் சி.மௌனகுருவினால் நடாத்தப்படும் அரங்க ஆய்வுகூடத்தின் ஏற்பாட்டில் புகழ்பெற்ற நடன இயக்குனரும் கொழும்பு நடன அரங்கு ஸ்தாபகருமான கபில பளிகவதனவின் தலைமையிலான நடன அமைப்பினரால் இப்பயிற்சி பட்டரை நடத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூட தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் ஆரம்பமான இப்பயிற்சி பட்டறையில் 30 பயிற்சியாளர்கள் பங்கு கொண்டனர்.

ஜேர்மன் அயர்லாந்து உட்பட பல நாடுகளில் பயிற்றப்பட்ட நடன விற்பன்னர் கபில பளிகவதனவுடன் அவரது குழுவினரான மாலித் தக்சிகா கலனி ஆகியோரால் நடன பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சாஸ்திரிய நடனம், பலே, மேற்கத்தேய நடனம் ஆகிய நடன வகைகளை கலந்து நடன பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயற்சி முகாமில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் கலந்து கொண்டார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .