2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நல்லைக்குமரன் மலர் வெளியீடு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

யாழ். மாநகரமன்ற சைவ சமய விவகாரக்குழுவின் 20ஆவது நல்லைக்குமரன் மலர் வெளியீடு இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்ற இம்மலர் வெளியீட்டில், நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர மரமாச்சார்ய சுவாமிகள், மற்றும் யாழ்ப்பாண சின்மயா மிஷன் சைதன்யா சுவாமிகளின் ஆசியுரையுடன் ஆரம்பிக்கப்பட்டன.

நல்லைக்குமரனின் 20ஆவது நூலின் முதற் பிரதியினை வலம்புரி நாளிதழ் ஆசிரியர் ந.விஜயசுந்தரம் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான பொறுப்பாளருக்கு வெளியிட்டு வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களை யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வழங்கி வைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .