2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

'நாட்டிய மயில்' நடன போட்டி

Kogilavani   / 2012 ஜூலை 29 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

இந்து பௌத்த கலாசார பேரவையினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட 'நாட்டிய மயில்' நடனப் போட்டி நேற்று சனிக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 25 போட்டியாளர்களில்; இறுதிச் சுற்றுப் போட்டிக்கு  தெரிவான மூன்று போட்டியாளர்களுக்கிடையில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில் ஒரு ஆண்போட்டியாளரும் இரண்டு பெண் போட்டியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இப்போட்டியில் முதலாம் இடத்தினை கணேசலிங்கம் பவனும்;; இரண்டாம் இடத்தினை தங்கலிங்கம் வேலோஜியும்; மூன்றாம் இடத்தினை கிருபாகரன் ஜான்சியும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலங்க சுமதிபாலா, அத்துரலிய ரத்தனதேரா, வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகனேசன், வாழ்நாள் போராசிரியர்
பாலசுந்தரம் பிள்ளை, இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .