2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கண்ணகி கலை இலக்கிய விழா

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜப்ரான்)

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இன்று சனிக்கிழமை காலை கண்ணகி கலை இலக்கிய விழா ஆரம்பமானது.

மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கிய கூடலின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக கண்ணகி ஊர்வலம் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் விழா மண்டபமான புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபம் வரை நடைபெற்றது.

இதன்போது,  கண்ணகி கலை இலக்கிய விழா மலர் வெளியீடு, விவரண ஒளிப்படக் காட்சி, கவியரங்கம், ஆய்வரங்கம், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளன.

கிழக்கு பல்கலைகழக பேராசிரியர் சி .மௌனகுரு தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மன்னார் மறைமாவட்ட சமுகத்தொடர்பு அரும்பணி மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை தமிழ்நேசன அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர். (படங்கள் சுக்ரி)







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .