2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

கதை சொல்லும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 20 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


நூலகத்திற்கும் மாணவர்களுக்குமான தொடர்பை மேம்படுத்தும் நோக்குடன் பாலர் பாடசாலை மட்டத்திலிருந்து அதனை ஊக்குவிக்கும் முகமாக வவுனியா நகரப்பகுதியிலுள்ள பாலர் பாடசாலைகளின் சிறார்களுக்கு கதை சொல்லும் நிகழ்வை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வவுனியா நகரசபை நடத்தவுள்ளது.

இன்று வவுனியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்கதை சொல்லும் நிகழ்வில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பாலர் பாடசாலை சிறார்கள் கலந்துகொண்டனர்.

சிறுவர்களுக்கான கதைகளை திரையில் ஓவியமாக வெளிப்படுத்தி அவர்களுக்கு கதைகளை சொல்லும் அதேவேளை, நூலகத்தின் பயன்பாடுகள் தொடர்பிலும் எடுத்துக்கூறப்பட்டது.

நகரசபையின் செயலாளர் வி.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகரசபைத் தலைவர் ஐ.கனகையா, உபதலைவர் எம்.எம்.ரதன், நகரசபை உறுப்பினர்களான சு.குமாரசாமி, இ.சிவகுமாரன், எஸ்.செல்லத்துரை ஆகியோரும் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் நா.சேனாதிராஜாவும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .