2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 'கலைச்சாரல்' நிகழ்வு

Menaka Mookandi   / 2012 ஜூலை 17 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையினர் நடத்திய கலைச்சாரல் என்னும் தலைப்பிலான மாபெரும் சிறப்பு கலை நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

திருத்தொண்டர் சபையின் கலாசார மண்டபத்தில் சபையின் உப தலைவர் க.சதாசிவம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீமத் கபாலீஸ்வராநந்தாஜீ பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

சுமார் 48 வருடங்களாக பல்வேறு சேவையாற்றிவரும் ஸ்ரீ விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையினர், இளங்கலைஞர்களின் திறமையினை வெளிக்கொணரும் வகையில் இவ்வாறான நிகழ்வை வருடாந்தம் நிகழ்த்தி வருகின்றது.

உப தலைவர் க.சதாசிவத்தின் தலைமையுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் 'இயல்' 'மாமாங்கேஸ்வரரும் திருத்தொண்டர்களும்' என்ற தலைப்பில் அருட்கவியரசு வை.ஈ.எஸ்.காந்தன் குருக்களின் ஆன்மீக சொற்பொழிவு இடம்பெற்றது.

சர்மிலா பிரபாகரனின் நர்த்தன பவனம் நாட்டிய பள்ளி மாணவிகளின் 'வரவேற்பு' நடனம் மற்றும் சங்கம நடனம்,குழு நடனம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பரத நாட்டிய கலாவித்தகர் திருமதி வசந்தி நேருவின் நிருத்திய கலாலய மாணவிகளின் சம்போ சிவசம்போ நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்கள், பொதுமக்கள் என பெருந்திரலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .