2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'ஆகக்குறைந்த பட்சம்' கவிதை நூல் வெளியீட்டு விழா

Super User   / 2012 ஜூலை 15 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலையின் மூத்த பெண் கவிஞர் அஷ்ரபா நூர்தீனின் எழுதிய 'ஆகக் குறைந்த பட்சம்' என்ற கவிதை நூல் வெளியீடு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிதை நூலின் முதலாவது பிரதியை இலங்கை வங்கியின் நிறைவேற்று அதிகாரி கி.முரளிதரன் நூலாசிரியையிடமிருந்து பெற்று வெளியிட்டு வைத்தார்.

திருமலை நவம் அறிமுக உரையை நிகழ்த்தியதுடன் சட்டத்தரணி எம்.சி.சபருள்ளா மதிப்பீட்டுரையை நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியை அஷ்ரபா நூர்தீன் நிகழ்த்தினார் நன்றியுரையை நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் சார்பில் பெ.பத்மபிரசன் நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0

  • ரோஷான் ஏ.ஜிப்ரி Tuesday, 17 July 2012 06:14 PM

    அதிக பட்ச சந்தோசம்கள். நட்புடன் அஸ்ரபா நூர்டீன் அவர்களுக்கு
    இது தோழமையுடன் ரோஷான் ஏ.ஜிப்ரி தாங்களின் ஆகக் குறைந்தபட்சம்
    கவிதை தொகுதி வெளியீடு அறிந்தேன் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .