2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

பாரம்பரிய அரங்கப்பொருட் காட்சியுடனான அரங்க ஆற்றுகை

Kogilavani   / 2012 ஜூலை 12 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

பாரம்பரிய அரங்கப் பொருட்களின் காட்சியும் பாரம்பரிய அரங்க ஆற்றுகை நிகழ்வும் நேற்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி.கி.கோவிந்தராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்லைக்கழக கலை கலாசாரப்பீட பீடாதிபதி பேராசிரியர்.மா.செல்வராசா, சுவாமி விபுலானந்;தர் அழகியற் கற்கை நிலைய பணிப்பாளர் கலாநிதி. க.பிரேம்குமார், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் பகீரதன், விரிவுரையாளர்கள், அண்ணாவியார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நாள் நிகழ்வில் மட்டக்களப்பின் பாரம்பரிய பறைமேளக்கூத்து அரங்கேற்றப்பட்டதுடன் அண்ணாவியார்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இரவு கண்டியரசன் (தென்மோடிக் கூத்து) அரங்கேற்றப்பட்டது.

இதேநேரம், மட்டக்களப்பின் பாரம்பரிய கூத்துக்களான வடமோடி  தென் மோடி கூத்துக்களில் கலைஞர்கள் பயன்படுத்தும் அலங்காரப்பொருள்கள், ஆடைகள், ஆயுதங்கள் என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X