2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பிரதேச இலக்கிய கவிதை பாடும் போட்டி

Kogilavani   / 2012 ஜூலை 12 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                       (எம்.சுக்ரி)
கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதேச இலக்கிய கவிதை பாடும் போட்டி இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி போட்டிக்கு விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர்க்கு தனிப்பட்ட ரீதியில் கடிதம் மூலம் இப்போட்டி தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.


அதேவேளை, புனித றமழான் நோன்பு கால விடுமுறைக்கு ஏதுவாக முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணைப் பரீட்சைகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன.

இதனால் மேற்படி போட்டிக்கு விண்ணப்பித்து அழைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மாணவர்கள் எவருக்கும் மேற்படி  பிரதேச இலக்கிய கவிதை பாடும் போட்டிகளில் பங்கு பெற முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த அழைப்புக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள உதவி மாவட்டச் செயலாளர் ஜீ.நவரூபரஞ்சனியிடமும் மாவட்ட கலாசார அபிவிருத்தி உதவியாளர் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீனிடமும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கமைவாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மாணவர்களுக்கு வசதியாகவும் அவர்களது தவணை பரீட்சைக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையிலும் வியாழக்கிழமை பங்புபற்றத் தவறும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மாணவர்களுக்கு மேற்படி போட்டி நிகழ்வை எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உதவி மாவட்டச் செயலாளர்  ஜீ. நவரூபரஞ்சனி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .