2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

'வை திஸ் கொலவெறி' குறும்பட வெளியீடும் திறமைக்கு மரியாதை விருது வழங்களும்

Kogilavani   / 2012 ஜூலை 09 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கலைஞர், எஸ்.ஜனூஸ் எழுத்து, இயக்கத்தில் உருவான 'வை திஸ் கொலவெறி' குறும்பட வெளியீடும், திறமைக்கு மரியாதை விருது வழங்கள் விழா 2012 நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

கலை, கலாசார கல்வி அபிவிருத்திக்கான அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஊடகம், கலை, இலக்கியம் போன்ற பல்துறைசார்ந்த கலைஞர்கள் 30 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

கலைஞர் எம்.ஏ.சீ.சர்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பொறியியலாளர் புரவலர் ஏ.எம்.றிஸ்வி, முன்னிலை அதிதியாக மாவட்ட மோட்டார் பேக்குவரத்து பிரதான பரிசோதகர் ஏ.எல்.எம். பாறூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .