2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

திருகோணமலையில் பௌர்ணமி தின திறந்த கவியரங்கு

Kogilavani   / 2012 ஜூலை 04 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

 
'நீங்களும் எழுதலாம்' கவிதை சஞ்சிகையின் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த 14 ஆவது பௌர்ணமி திறந்த கவியரங்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை விக்னேஸ்வரா மகாவித்தியாலத்தின் சேக்கிழார் அகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

'நீங்களும் எழுதலாம்' சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கத்தின் தலைமையில் மானிடமும் மதமும், மானிடமும் மொழியும், மானிடமும் இனமும் மற்றும் மானிடமும் தேசமும் என்ற தலைப்புக்களில் நடத்தப்பட்ட கவியரங்கில் மூத்த கவிஞர்களான தம்பி தில்லைமுகிலன், விஸ்வமித்திரன், நிலாவெளியூர் கெ.ஜ-தர்மா மற்றும் இளம் இளங்கவிஞர்களான சாரங்கன், ந.நவசஞ்சிதா, தி.நிரோஷன், ச.திருச்செந்தூரன், செ.பத்மபிரான், கு.கௌமாரன் ஆகியோர் தங்களின் படைப்புக்களை சமர்ப்பித்தனர்.

பின்னர் நடைபெற்ற கருத்தாடலில் சட்டத்தரணிகளான ஆ.ஜெகசோதி மற்றும் எஸ்.திருச்செந்தில்நாதன், மூத்த எழுத்தாளர்களான நந்தினி, ராஜதர்மராஜா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X