2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

மர்ஹும் ஸதகாவின் பண்முக படைப்புக்கள் அடங்கிய தொகுப்பு நூலான 'எழுத்தின் புன்னகை' வெளியீடு

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மர்ஹும் ஏ.ஜீ.எம்.ஸதகாவின் பண்முக படைப்புக்கள் அடங்கிய  முழுத் தொகுப்பு நூலான 'எழுத்தின் புன்னகை' வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச சபை கட்டிட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஏ.பீ.எம்.மீடியாவின் ஏற்பாட்டில் கவிஞர் எஸ்.நளீமின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நூல் வெளியீட்டை பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ள ஷகீலா ஸதகா பெற்றுக்கொண்டார்.

ஸதகாவின் கவிதைகள் பற்றி பேராசிரியரும் திறனாய்வாளருமான எஸ்.யோகராசா ஸதகாவின் சிறுகதை தொடர்பாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன் மற்றும் அபுனைவு தொடர்பாக பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் உரை நிகழ்த்தினர்,

சதகாவும் நானும் எனும் தலைப்பில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலி ஆகியோரும் இதன்போது உரை நிகழ்த்தினர்.

ஸதகா எழுதிய 109 கவிதைகள், 12 சிறுகதைகள், இலக்கியம், அரசியல், சமயம், கல்வி, பண்பாடு குறித்த 58 கட்டுரைகள், கடிதங்கள், அவரது புகைப்படங்கள் அவரைப் பற்றி மற்றவர்களின் மதிப்பீடுகளும் நினைவுக் குறிப்புக்களுமாக 615 பக்கங்களில் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X