2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'வல்லூறு' குறுந்திரைப்பட வெளியீடு

Kogilavani   / 2012 ஜூன் 27 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

'வல்லூறு' என்ற 20 நிமிட குறுந்திரைப்பட வெளியீடும் கண்காட்சியும் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய மண்டபத்தில் இடம்பெற்றது.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுபோதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளிக்கும் 'திருப்புமுனை புதுவாழ்வகம்' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் தோட்டவெளியில் இயங்கும் திருப்புமுனை புதுவாழ்வகத்தின் இயக்குநர் அருட்திரு.வின்சன்ற் பற்றிக் (அமதி) அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மன்னார் ஆயர் மேதகு இரா.யோசேப்பு ஆண்டகை, மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.எம்.சியாம், மன்னார் வர்த்தக வங்கி முகாமையாளர் ஜே.அருள் ஞானசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏ. நிசாந்தன், ஏ. சசிதரன் ஆகிய சகோதரர்களினால் இயக்கப்பட்ட வல்லூறு குறும்படத்தை மன்னார் ஆயர் வெளியிட்டு வைத்தார்.

இக்குறும்படத்திற்கான விமர்சன உரையினை மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனர் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் வழங்கினார்.

'குறும்படத்திற்குரிய பல யுக்திகளை சிறப்பாகக் கையாண்டு தான் சொல்லவரும் செய்தியினை இயக்குனர் அழுத்தம் திருத்தமாக, வெளிக்கொண்டு வருகின்றார்.

குடிபோதைக்கு அடிமையான தகப்பன் பக்கத்து வீட்டு சிறுமியை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி கொலை செய்கின்றான். இக்கொடிய தந்தையை உருவகப்படுத்தும் வகையில் இக்குறும்படத்திற்கு 'வல்லூறு' எனப் பெயரிட்டது பொருத்தமாகவும், சிறப்பாகவும் உள்ளது' என தமிழ் நேசன் அடிகளார் இதன்போது தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X