2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'அது ஒரு காலம்' குறுந்திரைப்பட வெளியீடு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 27 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


'அது ஒரு காலம்' குறுந்திரைப்பட வெளியீட்டு விழா ஓட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1982ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்த சிறார்களின் பதிப்பு என்னும் கருப்பொருளில் கலீல் மீறாலெப்பையின் கதையில் முகைதீன் ஹசனின் இயக்கத்தில் ஏ.விஷனின் வெளியீடாக இந்த குறுந்திரைப்படம் வெளிவந்துள்ளது.

இந்தக் குறுந்திரைப்படத்தில் நடித்த கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், ஏ.விஷன் நிறுவனத்தினால் அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.விஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஜே.எம்.அன்வர் தலைமையில் நடைபெற்ற வெளியீட்ட விழாவில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சால் பெரேரா ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், சபை உறுப்பினர் எம்.ஜூனைட் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X